தூம் 3 படத்தை விளம்பரப்படுத்த அமீர் கான், அபிஷேக் பச்சன், கத்ரினா கைஃப் உள்ளிட்டவர்கள் நேற்று சென்னை வந்தனர்.

அப்போது பேசிய அமீர்கான், நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். ரஜினியின் ஸ்டையில் என்னை மிகவும் கவர்ந்தது. அவரது ரசிகனாக இருக்கும் போதுதான் சினிமாவில் அறிமுகமானேன். அந்த நேரத்தில் ஆதாங் கி ஆதாங் படத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரது மனித நேயம், நேரம் தவறாமையை கண்டு வியந்தேன். அவர் மீதான மதிப்பு உயர்ந்தது என தெரிவித்தார்.

பாலசந்தருடனான சந்திப்பை பற்றிய கேள்விக்கு பதிலளித்தவர், தாரே ஜமீன் பர் படத்துக்காக தனியார் அமைப்பு விருது அளித்த நிகழ்ச்சியில் பாலசந்தர் என்னை வெகுவாக புகழ்ந்தார். அது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் பேச்சு என்னை கண் கலங்க வைத்தது. அதனாலேயே அவரை சந்தித்தேன் என்றார்.

உன்னால் முடியும் தம்பி படத்தை ரீமேக் செய்வதாக வரும் செய்தியில் உண்மையில்லை என்றும் தெரிவித்தார்.

Leave a Reply