shadow

ஐபிஎல் 2017: புனே அணியில் இருந்து தோனி திடீர் நீக்கம்

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த ஆண்டும் கடந்த ஆண்டு கலந்து கொண்ட எட்டு அணிகள் பங்கு பெறுகின்றன.

இந்நிலையில் புனே அணியின் கேப்டன் தோனி திடீரென நீக்கப்பட்டுள்ளார். தோனி கேட்டுக்கொண்டதன் பேரிலேயே அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீபன் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என்றும் புனே அணி அறிவித்துள்ளது.

கேப்டனாக இல்லாதபோதிலும் தோனி வழக்கம்போல் புனே அணியில் விக்கெட் கீப்பராக தொடர்வார் என்றும் அணிக்கு அவரது ஒத்துழைப்பு கண்டிப்பாக இருக்கும் என்றும் புனே அணி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply