கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தோனியின் திடீர் முடிவு

கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தோனியின் திடீர் முடிவு

கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகிய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் தோனி, தற்போத் ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில்  கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக டோனி பிசிசிஐ இடம் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளதாகவும், பிசிசிஐ அவரது முடிவை ஏற்று கொண்டதாகவும்,  உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும் ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் தோனி விளையாடுவார் என்றும், இம்மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது ஒருவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிக்கான தேர்வில் தோனி இடம்பெறுவார் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது

தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து டெஸ்ட் போட்டியின் கேப்டனாக உள்ள விராத் கோஹ்லி கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.