இந்திய அணியில் மீண்டும் தோனி: ரசிகர்கள் உற்சாகம்!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி சற்று முன் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

விராத் கோலி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை டி20 போட்டியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் இந்திய அணிக்கு வழிகாட்டியாக தல தோனி அவர்கள் செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக வழிகாட்டியாக செயல்படுவார் என்ற அறிவிப்பு மற்ற அணிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தோனியின் அனுபவம் மற்றும் வழிகாட்டி நிச்சயமாக இந்திய அணிக்கு பாசிட்டிவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது