கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம் ஏற்பட்டதாக வந்த புகாரை அடுத்து அதுகுறித்து விசாரணை செய்து நீதிபதி முத்கல் அறிக்கை ஒன்றை தயாரித்து நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியும் இந்த சூதாட்டத்தில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த கியூ பிரிவு முன்னாள் எஸ்.பி சம்பத் குமார், நீதிபதிகள் விசாரணைக் குழுவின் முன் ஆஜராகி தோனி மீதான சூதாட்ட குற்றச்சாட்டை கூறியதாகவும், அந்த அறிக்கையில் உள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இறுதிப்போட்டியில் எத்தனை ரன்கள் எடுத்து எப்படி தோல்வியுற வேண்டும் என முன்கூட்டியே தோனியிடம் தெரிவிக்கப்பட்டது என்றும், இதற்கு வெளிநாட்டு சூதாட்டக்கும்பலும் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

சூதாட்டம் குறித்து தமிழக சிபிசிஐடி போலீஸார் முறையாக விசாரணை செய்யவில்லை என்றும், சூதாட்ட புகார்கள் குறித்து மேலும் தீவிர விசாரணை செய்தால் பல உண்மைகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply