shadow

வசூலிலும் சென்சுரி அடித்த தோனி.

1நேரடி தமிழ் படங்களுக்கு இணையாக தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தி படமான ‘தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய வசூலை செய்துள்ளது. இந்த படம் சென்னையில் கடந்த வார இறுதி நாட்களில் 19 திரையரங்க வளாகங்களில் 275 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,06,28,085 வசூல் செய்துள்ளதோடு திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் நிரம்பியிருந்ததாக திரையரங்க உரிமையாளர்களின் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளது.

அதேபோல் விஜய்சேதுபதி, ரித்திகாசிங் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ கடந்த வார இறுதியில் சென்னையில் 16 திரையரங்க வளாகங்களில் 195 காட்சிகள் ஓடி ரூ.65,87,940 வசூல் செய்துள்ளதாகவும் சென்னையில் இதுவரை ரூ.2,01,12,310 வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த தனுஷின் தொடரி திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெற்று தரவில்லை. சென்னையில் கடந்த வாரம் 21 திரையரங்க வளாகங்களில் 184 காட்சிகள் ஓடி ரூ.39,93,780 மட்டுமே வசூல் செய்துள்ளது. கடந்த செப் 22 முதல் இந்த படம் மொத்தமாக சென்னையில் ரூ.2,62,49,080 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீயான் விக்ரமின் இருமுகன் கடந்த வார இறுதியில் சென்னையில் 10 திரையரங்குகளில் 70 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.12,64,560 வசூல் செய்துள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதம் நெருங்கியுள்ள நிலையிலும் சென்னையில் 70% பார்வையாளர்கள் திரையரங்குகளில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. செப் 8 முதல் நேற்று வரை இந்த படம் சென்னையில் ரூ.5,60,46,180 வசூல் செய்துள்ளது.

Leave a Reply