சென்னையை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கும், சர்வதேச ஸ்குவாஷ் வீராங்கனையான சென்னையை சேர்ந்த தீபிகா பல்லிகலும் கடந்த ஒரு ஆண்டாக நண்பர்களாக பழகி வந்தனர். இருவரும் உடல் தகுதிக்காக ஒரே பயிற்சியாளரிடம் பயிற்சி பெற சென்றபோது பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவருக்கும் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது.  இவர்களது   திருமணம் 2015–ம் ஆண்டு நடக்கிறது.

28 வயதான தினேஷ் கார்த்திக் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

2007–ம் ஆண்டில் நிதிகா என்பவரை திருமணம் செய்திருந்தார். மனக்கசப்பு காரணமாக இருவரும் விவகாரத்து பெற்றனர் என்பது  குறுப்பிடத்தக்கது .

Leave a Reply