மேஷம்
கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்

ரிஷபம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, நீலம்

மிதுனம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்

கடகம்
பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்

சிம்மம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு

கன்னி
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்கைளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

துலாம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். நட்பு வட்டம் விரியும். புது வேலை கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்

விருச்சிகம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். சொந்த-பந்தங்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, ப்ரவுன்

தனுசு
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

மகரம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.
அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்

கும்பம்
கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்துப் போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு

மீனம்
குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்

 

Leave a Reply