மேஷம்
உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

ரிஷபம்
நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்

மிதுனம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திக்கலாம். உறவினர்களின் ஆதரவுப் பெருகும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு

கடகம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி சூழ்நிலை உருவாகும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். உங்களது திறமைகள் மீது நீங்கள் நம்பிக்கை வைப்பது நல்லது. பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்

சிம்மம்
சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

கன்னி
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்

துலாம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே

விருச்சிகம்
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்

தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். உடல் நலம் சீராகும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு

மகரம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ப்ரவுன்

கும்பம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சை

மீனம்
குடும்ப ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை

Leave a Reply