மேஷம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் சச்சரவு வரும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. உத்தியோ கத்தில் மேலதிகாரியால் மறைமுக பிரச்னைகள் வரக்கூடும். மாலை 6 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ப்ரவுன்

ரிஷபம்
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தாயின் உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சை

மிதுனம்
விடாப்பிடியான செயல்களில் வெற்றியுண்டு. கணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும். பழைய கடன் ஒன்றை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை

கடகம்
இன்றைய தினம் திருப்திகரமாக இருக்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகி நிம்மதி கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வாகனச் செலவுகள் விலகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்

சிம்மம்
மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை

கன்னி
குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். பிராத்தனைகள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாகனப் பழுது நீங்கும். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். மாலை 6 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானித்து செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், பிங்க்

துலாம்
நீண்ட நாளாக மனதிலிருந்து வந்த குழப்பங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி கிட்டும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரித்துப் போவார்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் :

விருச்சிகம்
காரியங்களை முடிப்பதிலிருந்த தடுமாற்ற நிலை மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சோம்பல், உடல் அசதி, நீங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். கோபம் தணியும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, ரோஸ்

தனுசு
இன்றைய தினம் பரபரப்புடன் காணப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து எளிமையாக வாழ விரும்புவீர்கள். கணவன்- மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

மகரம்
கணவன்- மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் சில காரியங்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர்சிவப்பு, கிரே

கும்பம்
இன்றைய தினம் பணப்பற்றாக்குறை நீங்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்

மீனம்
மாலை 6 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. அக்கம்- பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோ கத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

Leave a Reply