மேஷம்
குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். காசுபணம் தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவிர்கள். குலதெய்வப் பிராத்தனை களை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

ரிஷபம்
அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல் நிலை சீராகும். வெளிவட்டாரம் மகிழ்ச்சி தரும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

மிதுனம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷனாவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

கடகம்
இன்று உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்விர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு கிட்டும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் சந்தோஷம் கிட்டும். வேற்று மதத்தினரால் உதவி கிடைக்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

சிம்மம்
அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

கன்னி
முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

துலாம்
இன்று பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் அதரவு கிட்டும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். தாய்வழி உறவினர்களால் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

விருச்சிகம்
இன்று தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சகோதரவகையில் மகிழ்ச்சி தங்கும். அம்மாவின் உடல் நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

தனுசு
இன்று மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரசாங்க வேலைகள் சுமுகமாக முடியும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

மகரம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

கும்பம்
எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

மீனம்
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணப்பற்றாகுறை விலகும். மனதிற்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பகர்களின் வருகையுண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

Leave a Reply