மேஷம்
நண்பகல் வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்

ரிஷபம்
குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பகல் முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானித்து செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு

மிதுனம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள்-. அரசு காரியங்கள் விரைந்து முடியும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் குறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்

கடகம்
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

சிம்மம்
சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்

கன்னி
நண்பகல் வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று உணர்ந்துக் கொள்வது நல்லது. இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே

துலாம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். நண்பகல் முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்

விருச்சிகம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அக்கம் – பக்கம் வீட்டார் அனுசரனையாக நடந்துக் கொள்வார். எதிர்பாராத சந்திப்பு நிகழும். சகோதரி ஒத்துழைப்பார். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு

தனுசு
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ப்ரவுன்

மகரம்
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பாராத உதவி கிட்டும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சை

கும்பம்
சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனோபலம் அதிகரிக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை

மீனம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *