மேஷம்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.

அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, ஊதா

 ரிஷபம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், நீலம்
 
 மிதுனம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பழைய கடன் பிரச்சனை அவ்வப்போது மனசை வாட்டும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்

கடகம்
உங்கள் பலத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.

அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்

சிம்மம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே

கன்னி
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும்.

அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப்பச்சை

துலாம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பிள்ளைகளால் நிம்மதி உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், ப்ரவுன்

 விருச்சிகம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : பச்சை, வெள்ளை

தனுசு
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல், வீண் டென்ஷன், அலைச்சல் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய சிந்தனைகள் தோன்றும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.

அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

 மகரம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும்.

அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்

 கும்பம்
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஒரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம்.

அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே

மீனம்
அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் :வெள்ளை, ஆரஞ்சு

Leave a Reply