shadow

ஹாலிவுட் படத்தில் ஹீரோவாகும் தனுஷின் அமுல்பேபி

amithashதனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த சூப்பர் ஹிட் வெற்றிப்படம் ‘வேலையில்லா பட்டதாரி’. வேல்ராஜ் இயக்கிய இந்த  படத்தில் தனுஷின் வில்லனாக அமுல்பேபி என்று அவரால் கேலி செய்யப்பட்ட வில்லன் நடிகர் அமிதாஷ் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஸ்டெப் அப்’, ‘சேவ் த லாஸ்ட் டான்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ட்வேன் அட்லர் இயக்கவுள்ள அடுத்த படமும் நடனத்தை பற்றிய கதைதான். இந்த படத்தில் நடனக்கலைஞராக நடிக்க அமிதாஷ் தேர்வு செய்யபப்ட்டுள்ளார். இந்த படத்தின் ஆடிஷனுக்கு பலமுறை சென்று தனது நடனத்திறமையை நிரூபித்ததாகவும் அதன்பின்னரே இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் அமிதாஷ் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பாஜிராவ் மஸ்தானி’ படத்திற்கு நடன இயக்குனராக பணியாற்றிய சம்பா கோபி கிருஷ்ணா நடன இயக்குனராக இந்த படத்தில் பணியாற்றவுள்ளார். இரண்டு பெண் நடனக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் ஒரு ஆண் நடனக்கலைஞரை காதல் செய்கின்றனர். இந்த முக்கோண காதலின் முடிவு என்ன என்பதுதான் படத்தின் கதை என கூறப்படுகிறது.

Chennai Today News: Dhanush Villain turns as hollywood hero

Leave a Reply