தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி செய்தி!

தனுஷ் நடித்த அடுத்த படத்தின் டிரைலர் நாளை ரிலீசாக உள்ளதால் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

தனுஷ் நடிப்பில் ஆனந்த் எல் ராய் என்ற அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அட்ராங்கி ரே.

சாரா அலிகான் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.

இந்த படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது