shadow

5விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ‘கத்தி’ திரைப்படத்தில் தனுஷ் ஒரு பாடலை எழுத இருப்பதாகவும், அந்த பாடலை விஜய் பாட இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

3 படத்திற்கு பின்னர் அனிருத்-தனுஷ் மிகவும் நெருக்கமாகிவிட்டனர். அனிருத் இசையமைக்கும் பல படங்களுக்கு தனுஷ் ஒரு பாடலை பாடுவார் அல்லது பாடலை எழுதிக்கொடுப்பார். அதுபோலவே விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் ஒரு பாடலை தனுஷை எழுதிக்கொடுக்குமாறு அனிருத் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாடல் எழுத தனுஷ் சம்மதித்துள்ளார். இதற்கு முருகதாஸ் மற்றும் விஜய் ஓகே சொல்லிவிட்டனர்.

கொலைவெறி ஸ்டைலில் அமையவிருக்கும் இந்த பாடலை விஜய்யே பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குத்துப்பாட்டு ஸ்டைலில் அமையவிருக்கும் இந்த பாடலில் ஒருசில காட்சிகளில் விஜய்யுடன் நடனம் ஆடவும் தனுஷ் சம்மதித்துள்ளார். விஜய் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சமந்தாவை கேலி செய்வது போல இந்த பாடலில் நடிக்க முதலில் சமந்தா தயங்கியதாகவும் அதன்பின்னர் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைக்க உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவிள்ளனர்.

Leave a Reply