தனுஷின் ‘பட்டாஸ்’ திரை விமர்சனம்

தனுஷ், சினேகா நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் விவேக்-மெர்வின் இசையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் பட்டாஸ் படத்தின் திரைவிமர்சனத்தை தற்போது பார்ப்போம்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனுஷ் இரண்டு வேடங்களில் அட்டகாசமாக நடித்துள்ளார். குறிப்பாக ப்ளாஷ்பேக் காட்சிகளில் தனுஷின் நடிப்பு இன்னொரு தேசிய விருதுக்கு இணையானது என்று கூறினால் அது மிகையாகாது தனுஷூக்கான பில்டப் மற்றும் மாஸ் காட்சிகள் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் தனுஷ் ரசிகர்களுக்கான சூப்பரான விருந்து என்பது குறிப்பிடத்தக்கது

விவேக்-மெர்வின் ஆட்டம் போட வைக்கும் பாடல்கள் மற்றும் அசத்தலான பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். துரை செந்தில்குமார் தான் ஒரு பெரிய இயக்குனர் என்பதை எல்லாம் மறந்துவிட்டு தனுஷ் ரசிகர்களுக்கும், பொங்கல் விழாவை கொண்டாடும் மக்களுக்கும் என்ன வேண்டும் என்பதை சரியாக கணித்து ஒரு பக்கா கமர்சியல் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் அழிந்து போன தற்காப்பு கலைகளில் ஒன்று அடிமுறை. இந்த கலை குறித்து மிகவும் விரிவாக அலசி ஆராய்ந்து இந்த படத்தில் அவர் சரியாக இணைத்துள்ளார். இதனால் இந்த கலை மீண்டும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது

தனுஷுக்கு இணையாக சினேகா தனது கேரக்டரை உணர்ந்து சூப்பராக நடித்துள்ளார். அவருக்கு இந்த படம் ஒரு மிகச்சிறந்த ரீஎன்ட்ரி படம் என்று என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் ஒரு ஜாலியான கமர்ஷியல் படம்தான் பட்டாஸ். இந்த படத்தின் கதையை ஒரு வரி கூறினால் கூட சுவாரசியம் போய்விடும் என்பதால் கதையை கூறுவதை தவிர்த்து விட்டோம்

Leave a Reply