இதுவரை மனநிலை சரியில்லாதவராக திரைப்படங்களில் மட்டும் நடித்துக்கொண்டிருந்த தனுஷ், தற்போது நிஜத்திலும் நான் நல்லவனா கெட்டவனா என்று நாயகன் கமல் பாணியில் பேச ஆரம்பித்துவிட்டார். எனவே அவரது மனநிலை குறித்து அவரது நண்பர்களே லேசாக சந்தேகம் கொண்டுள்ளனர்.
மார்ச் 1ஆம் தேதி தனுஷ் டுவிட்டரில் நான் நல்லவனா அல்லது கெட்டவனே என்ற ஆராய்ச்சி மற்றவர்களுக்கு தேவையில்லை என்றும், நான் எல்லோரையும் போல ஒரு நார்மலான மனிதன் என்றும், எனக்கும் கோபம் வரும் என்று கூறியுள்ளார்.
தனக்கு திரையில் மட்டுமே நடிக்க தெரியும் என்றும் நிஜ வாழ்வில் தனக்கு நடிக்க தெரியாது என்றும் அடுத்த டுவிட்டில் கூறியுள்ளார்.
மேலும் நான் என்னுடைய மனசாட்சிக்கும், என்னை ரசிக்கும் ரசிகர்களுக்கும் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன் என்றும், நான் ஒரு கடுமையான உழைப்பாளி என்றும் கூறியுள்ளார்.
அடுத்தடுத்த டுவிட்டில் ஒன்றுக்கொன்று சம்மந்தம் இல்லாமல் தனுஷ் கூறியதை பார்த்து மயக்கமென்ன தனுஷ் மாதிரி இருக்கின்றாரே என்று அவருக்கு நெருக்கமானவர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.