தனுஷ் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார்

தனுஷ் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார்

தனுஷ் இயக்கிய ப.பாண்டி திரைப்படம் அனைத்து தரப்பினர்களாலும் பாராட்டுக்களை பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார்.

தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ‘நான் ஈ’ புகழ் சுதீப் பச்சைக்கொடி காட்டியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் பெங்களூர் சென்று சுதீப்பை சந்தித்த தனுஷ், தன்னுடைய அடுத்த படத்தின் முக்கிய கேரக்டர் குறித்து கூறியதாகவும், அந்த கேரக்டரில் நடிக்க சுதீப் ஆர்வம் காட்டியதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து இந்த படத்தில் சுதீப் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கடைசியாக சுதீ, விஜய் நடித்த ‘புலி’ படத்தில் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ்-சுதீப் முதல்முறையாக இணையும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது

Leave a Reply