தனுஷ்-அனிருத் மீண்டும் கைகோர்க்கும் ‘மாரி 2’

தனுஷ்-அனிருத் மீண்டும் கைகோர்க்கும் ‘மாரி 2’
maari2
இயக்குனர் பாலாஜி மோகனின் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர், விஜய்ஜேசுதாஸ் ஆகியோர் நடித்த ‘மாரி’ படம் கடந்த ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகயிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

‘மாரி 2’ திரைப்படம் வரும் அக்டோபர் முதல் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் பாலாஜி மோகன் ஆரம்பித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது தனுஷ் நடித்து வரும் ‘கொடி’ மற்றும் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘வடசென்னை’ படங்களை அடுத்து ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் ‘மாரி 2’ படத்திற்காக தனுஷ் முதல் பாகத்தில் இருந்த அவரது டிரேட்மார்க் மீசை மற்றும் தாடியுடன் தோன்றவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘மாரி 2’ படத்தில் தனுஷுடன் காஜல் அகர்வால் மற்றும் ரோபோ சங்கர் மீண்டும் இணையவுள்ளதாகவும், இவர்களை தவிர மேலும் சில நடிகர்கள் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் முதல்பாகத்தில் வில்லனாக நடித்த விஜய்ஜேசுதாஸ் ‘மாரி 2’ படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் ‘கொடி’ படத்தில் இருந்து விலகிய இசையமைப்பாளர் அனிருத் மீண்டும்  ‘மாரி 2’ படத்தில் இணையவுள்ளார் என கூறப்படுகிறது.

Chennai Today News: Dhanush and Anirudh once again joins in ‘maari 2’

Leave a Reply

Your email address will not be published.