தனுஷ்-ஐஸ்வர்யா விவகாரத்து: முடிவுக்கு வந்தது திருமண பந்தம்!

தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சற்று முன்னர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நானும் தனுஷும் நல்ல துணையாக பெற்றோர்களாக நண்பர்களாக இருந்தோம் என்றும் ஆனால் தற்போது இருவரும் பிரிய முடிவு எடுத்துள்ளதாகவும், இந்த முடிவை தங்களது நல விரும்பிகள் மதிப்பார்கள் என்று நம்புவதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது