shadow

மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்

dhanushதனுஷ் இன்று நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களில் ஜொலித்து கொண்டு கோலிவுட் பாலிவுட் என்று கலக்கி கொண்டு வந்தாலும், அவரை ஒரு முழு கலைஞனாக்கியது அவரது சகோதரரும், இயக்குனருமான செல்வராகவன் தான் என்று கூறினால் அது மிகையாகாது.

இந்நிலையில் ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கமென்ன’ படங்களை அடுத்து மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இந்த படம் அடுத்து ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

தனுஷ் தற்போது கவுதம் மேனனின் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, வெற்றி மாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், நதியா உள்பட பலர் நடித்து வரும் ‘பவர்பாண்டி’, என்ற படத்தையும் இயக்கி வருகிறார். மேலும் ‘செளந்தர்யா ரஜினி’ இயக்கவுள்ள இரண்டாவது படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேற்கண்ட படங்களை முடித்துவிட்டு தனுஷ், மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *