வடபழனி முருகன் கோவில்: நேற்று கும்பாபிஷேகம், இன்று ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

வடபழனி முருகன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

சென்னை வடபழனி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது என்பதும் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சிகளிலும் ஒரு சில யூடியூப் சேனல்களிலும் நேரலையாக ஒளிபரப்பபட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் திங்கள் முதல் வியாழன் வரை அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதை அடுத்து இன்று அதிகாலை 5 மணிக்கு சுமார் 2,000 பக்தர்கள் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

வடபழனி ஆண்டவர் கோவிலில் இன்று அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.