தமிழக பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது என்றாலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற தகவல் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மதுரை தல்லாகுளம் கோவில், ஸ்ரீரங்கம் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட பல பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும் காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என பெரும்பாலான கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது