அமெரிக்காவில் விசா மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்திய பெண் துணை தூதர் தேவ்யானி இன்று திரும்ப உள்ளார். நியூயார்க் விமானநிலையத்தில் இருந்து கிளம்பும் முன் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த தேவ்யானி ‘தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என்றும் தான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து காட்டுவேன் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் மீது விசா முறைகேடு செய்தல், தகவல்கள மறைத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் பதிவாகின. எனினும் அவருக்கு தூதரக ரீதியான சட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேற விரும்பினால் அவருக்கு அனுமதியளிக்கப்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு அவர் நியூயார்க்கில் இருந்து இந்தியா கிளம்பினார்.

தேவ்யானி விவகாரத்தில் இந்திய அமெரிக்க இருநாட்டு உறவில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று நடப்பதாக இருந்த இந்திய அமெரிக்க எரிசக்தி துறை ஒத்துழைப்பு தொடர்பான கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அமெரிக்க தூதரகங்களுக்கு வழங்கிவந்த பல்வேறு சலுகைகளை இந்திய அரசு பறித்தது.

Leave a Reply