சபரிமலை தீர்ப்பு: முதல்வர் பினராயி விஜயனுடன் கோவில் நிர்வகம் ஆலோசனை

சபரிமலை தீர்ப்பு: முதல்வர் பினராயி விஜயனுடன் கோவில் நிர்வகம் ஆலோசனை

சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய மனு தாக்கல் செய்யவிருப்பதாக ஏற்கனவே தேவஸ்தானம் போர்டு கூறியுள்ள நிலையில் இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தேவசம் போர்டு இன்று பேச்சு நடத்தவுள்ளது.

இந்த சந்திப்பின்போது சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பது குறித்தும், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்தும் , பெண்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பது பற்றியும் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் வரும் புதன்கிழமை நடைபெறுகிறது என்றும், இந்த நாளிலேயே பெண்களுக்கும் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலை, பெண்கள், தீர்ப்பு, பினராயி விஜயன்

Leave a Reply