shadow

vijay and gaundamaniபிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடித்து வரும் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை’ படத்தில் இடம்பெற்ற ஒரு கானா பாடலை சமீபத்தில் பாடிய பிரபல இசையமைப்பாளர் தேவா, அந்த பாடலை முடித்த கையோடு, இளையதளபதி விஜய்க்கும் ஒரு பாடலை பாடியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்து ஒலிப்பதிவு செய்யும் பணியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மும்முரமாக உள்ளார். சமீபத்தில் இந்த படத்திற்காக ஒரு கானா பாடலை கம்போஸ் செய்த ஜி.வி.பிரகாஷ், இந்த பாடலை தேவா பாடினால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து அவரை அணுகியதாகவும், தேவா இதற்கு உடனே விஜய்க்கு பாட சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.

தேவா, ஏற்கனவே விஜய் நடித்த பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், விஜய்க்காக பாடுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

Leave a Reply