shadow

தலைமுடியால் லட்சக்கணக்கில் சம்பாதித்த அமெரிக்க பெண்மணி

hair 1 hairஒரு வருடத்திற்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள ஒரு பெண்மணி வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் இருந்தார். ஆனால் இன்று அவர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். அவருடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது தலைமுடி என்று கூறினால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

வளர்ந்து வரும் நாகரீக உலகில் புதுப்புது டிசைன்களில் உடைகள் டிசைன் செய்வது ஒரு கலையாக இருந்து வரும் நிலையில் தலைமுடியில் அழகழகான உடைகளை தயார் செய்யும் முயற்சியில் இறங்கினார் Sarah Louise Bryan என்ற 28 வயது பெண்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் குடும்ப செலவுக்கே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பிரபல பாடகி லேடிகாகாவின் உடைகளை பார்த்ததும் இவருக்கு தலைமுடியில் இருந்து உடைகள் தயாரிக்கும் ஐடியா வந்ததாம்.

அழகு நிலையங்களில் இருந்து முடிகளை சேகரித்து கொதிக்கும் நீரில் நன்றாக சுத்தம் செய்து பின்னர் விதவிதமான ஆடைகளை அழகாக டிசைன் செய்துள்ளார்.

இவர் டிசைன் செய்த உடைகள் $410,000 வரை விற்பனை ஆகிறதாம். இவர் தயாரிக்கும் உடைகளும் அமெரிக்காவில் பெரும் வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply