shadow

இந்தியர்களுக்கு திடீர் கிராக்கி: அபுதாபி தொழிலதிபர்களின் தேடல் ஏன்?

அபுதாபி தொழிலதிபர்கள் இந்திய ஆடிட்டர்களுக்கு திடீரென அதிக சம்பளத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு காரணம் அபுதாபியில் புதியதாக அமல்படுத்தப்பட்ட மதிப்பு கூட்டு வரியே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி என்ற புதிய வரிமுறை அமல் செய்யப்பட்டது. இந்த வரிவிதிப்பின் காரணமாக ஆடிட்டர்களுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்ட நிலையில், தற்போது அபுதாபியில் புதிய மதிப்புக்கூட்டு வரி அமலுக்கு வருகிறது.

ஏற்கனவே மதிப்பு கூட்டு வரியில் அனுபவம் வாய்ந்த, அதே நேரத்தில் இந்தி மொழி பேசக்கூடியவர்களாக இந்தியர்கள் இருப்பதால் அபுதாபி தொழிலதிபர்கள், இந்திய ஆடிட்டர்களுக்கு பெரும் சம்பளத்துடன் அழைப்பு விடுத்துள்ளனர். எனவே இந்தியர்கள் அதிகளவு அபுதாபிக்கு செல்வதாகவும், இந்திய ஜிஎஸ்டி வரிக்கணக்கு முறையை விட அபுதாபி வரிக்கணக்கு முறை எளிதாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply