shadow

துணைமுதல்வர் ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்

தினகரன் தனிக்கட்சி, கமல்ஹாசனின் அரசியல் சுற்றுப்பயணம், ரஜினியின் அரசியல் அறிவிப்பு என தமிழக அரசியல் களமே பரபரப்பாக உள்ள நிலையில் இன்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் திடீரென டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மக்கள் திலகம் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெறுவதை அடுத்து இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கலந்து கொள்வதை உறுதி செய்வதற்காகவே ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளையொட்டி இன்று கிண்டி எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் மலர்தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply