சென்னையை நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மக்கள் அதிர்ச்சி!

வங்க கடலில் தோன்றிய உள்ள தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி திரும்பி உள்ளதால் சென்னை பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

வங்ககடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஸ்ரீஹரிகோட்டா மற்றும் கடலூர் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சென்னைக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் சென்னை மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது