டெல்லியில் ஒரே வாரத்தில் 1750 பேருக்கு டெங்கு: அதிர்ச்சி தகவல்

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெல்லியில் 1750 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த டெல்லி அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

டெல்லியில் நவம்பர் மாதத்தில் மட்டும் 5600 பேருக்கு டெங்கு காய்ச்சலை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் 7100 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலால் கடந்த 2015க்கு பிறகு இந்த ஆண்டுதான் டெல்லியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது