தாமதமாக பார்சலை கொண்டு வந்த நபரை 20 முறை கத்தியால் குத்திய இளம்பெண்

தாமதமாக பார்சலை கொண்டு வந்த நபரை 20 முறை கத்தியால் குத்திய இளம்பெண்

டெல்லியில் பார்சலை தாமதமாக கொண்டு வந்ததால் வாலிபர் ஒருவரை 20 முறை குத்திய இளம்பெண்ணையும் அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய சகோதரரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி புறநகர் நிவாஸ் விகார் பகுதியை சேர்ந்த இள்ம்பெண் கமல்தீப். இவர் ஆன்லைன் மூலமாக செல்போன் ஒன்றை வாங்கினார். அந்த செல்போன் பார்சலை கடை ஊழியர் கேசவ் தாமதமாக கொண்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கமல்தீப்பும், அவரது சகோதரர் ஜிதேந்தர் சிங்கும் பார்சல் கொண்டு வந்த அந்த வாலிபரை கத்தியால் சரமாரியாக குத்தினர். 20-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தப்பட்ட அவர் ஆபத்தான நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கமல்தீப் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.