காலவரையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு!

காலை வரையறையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் அனைத்து பள்ளிகளும் மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி விடுமுறை என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை அனுமதித்த அரசு குழந்தைகளை மட்டும் பள்ளிக்கு செல்ல கட்டாயப்படுத்துவது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனால் டெல்லி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக காலவரையின்றி பள்ளிகள் மூடப்பட்டுள்ளது அம்மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.