டெல்லியில் பொதுமுடக்கம்: அதிரடி முடிவெடுத்த அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் சற்று முன் டெல்லியில் பொது முடக்கம் என அறிவித்துள்ளது டெல்லி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதை அடுத்து அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று முதல் ஏப்ரல் 26 வரை டெல்லியில் முழு ஊரடங்கு உத்தரவு என்றும் ஏப்ரல் 26 பின்னர் நிலமையை அனுசரித்து பொது முடக்கம் நீடிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் டெல்லி அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply