shadow

டெல்லி மாநகராட்சி தேர்தல்: பாஜக முன்னிலை, ஆம் ஆத்மி கரைகிறதா?

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி செய்து வரும் நிலையில், டெல்லி மாநகராட்சிக்கான தேர்தலில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

கடந்த 23ஆம் டெல்லியில் உள்ள 272 வார்டுகளில் 270 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 2,886 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 9 மணி நிலவரப்படி, டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 145-க்கும் மேற்பட்ட வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 28 வார்டுகளிலும், ஆம் ஆத்மி கட்சி 24 வார்டுகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. சுயேட்சை வேட்பாளர் 1 வார்டில் முன்னிலை வகித்து வருகிறார்.

முன்னிலை நிலவரப்படி டெல்லி மாநகராட்சியை பாஜக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மியின் செல்வாக்கு குறைந்துள்ளதையே இந்த தேர்தல் முன்னிலை நிலவரம் காட்டுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply