இன்று டெல்லி சட்டமன்றத்தில் ஜன்மோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் கடும் அதிருப்தியில் இருந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இன்று டெல்லிய் சட்டமன்றத்தில் ஜன்லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்ட  போது, அதற்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியின் 27 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரித்து வாக்களித்தனர். இந்த மசோதாவுக்கு எதிராக 42 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இதனால் இந்த மசோதாவை டெல்லி சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த முதல்வர் இன்று சற்று முன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

Leave a Reply