shadow

ராகுல்காந்தியை தொடர்ந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது.

aravindஹரியானா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான கிஷன் கிரேவால் என்பவர் ஒன் ரேங் ஒன் பென்ஷன் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் ராணுவ வீரர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் உடலை மருத்துவமனையில் பார்க்க சென்ற காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி துணை முதல்வர் மணிஸ் சிசோடியா ஆகியோரையும் போலீஸார் கைது செய்த நிலையில் நேற்று இரவு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் கைது செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட கிஷன் கிரேவால் உடலை பார்க்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போலீஸாரின் எதிர்ப்பை மீறி சென்றதாகவும், இதன் காரணமாக டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மாநகர ஆர்.கே.புரம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டு நள்ளிரவு 12 மணியளவில் விடுதலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

டெல்லியில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் ராகுல்காந்தி ஆகிய மூன்று விவிஐபிக்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply