இலவச சேவை செய்யும் ஓலா

முதலமைச்சர் பாராட்டு

கொரோனா காலத்தில் இலவச சேவை செய்ய முன்வந்துள்ள ஓலா நிறுவனத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரபல தனியார் கேப் நிறுவனமான ஓலா, தனது வாகனங்களை இந்த கொரோனா நேரத்தில் ஆம்புலன்ஸ் ஆக சேவை செய்யவிருப்பதாகவும், மருத்துவமனைகளில் இருந்து வீட்டிற்கும் வீட்டில் இருந்து மருத்துவமனைகளுக்கும் செல்பவர்கள் இலவசமாக ஓலாவை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் இந்த சேவை செய்ய அனுமதி அளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு நன்றி என்றும் ஓலா நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த சேவை செய்ய முன்வந்த ஓலா நிறுவனத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.