கடந்த சனிக்கிழமை டெல்லி முதல்வராக பதவியேற்றுக்கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தபின், வரும் 30ஆம் தேதிக்குள் அதாவது இன்றுக்குள் டெல்லியில் உள்ள வீடுகளுக்கு தினசரி 700லிட்டர் இலவச குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என்றும், மின் கட்டணத்தை 50% குறைப்பது என்றும் உறுதியளித்திருந்தார்.

ஆனால் இன்று காலை திடீரென அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு 102 டிகிரி காய்ச்சல் இருப்பதாக தெரிவித்த அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இன்னும் இரண்டு நாட்களுக்கு பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதனால் இன்று அறிவிக்கப்பட இருந்த இலவச குடிநீர் திட்டம் தள்ளி வைக்கப்படுவதாகவும், மாற்று தேதி குறித்த முறையான அறிவிப்பு நாளை அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply