பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் கடும் அமளியால் டெல்லி சட்டசபையில் வன்முறை வெடித்தது. முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் சபாநாயகர் உள்பட பலரது மைக்குகள் உடைந்தன.

ஆப்பிரிக்க பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட அமைச்சர் சோம்நாத் பாரதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சோம்நாத் பாரதி மீது காகிதங்களை வீசி ரகளை செய்தனர். முதல்வரின் மைக்கை காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆசிப் கான் என்ற எம்.எல்.ஏ உடைத்து சேதமாக்கினார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் சோம்நாத் பாரதிக்கு வளையல்களையும் லிப்ஸ்டிக்கையும் கொடுத்து அவமரியாதை செய்தனர். இந்த அமளியால் கடும் அதிர்ச்சி அடைந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த அமளி மூலம் காங்கிரஸ், பாரதிய ஜனதாவின் ரகசிய கூட்டம் அம்பலம் ஆகியுள்ளது என பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

Leave a Reply