shadow

பத்தாயிரம் முட்டைகளால் ஆன ராட்சத ஆம்லேட்: கின்னஸில் இடம்பெறுமா?

பெல்ஜியம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு நடந்த விழாவில் மக்கள் வித்தியாசமாக ஏதாவது செய்ய முடிவு செய்தனர். இதன்படி இந்த ஆண்டு பெல்ஜியத்தில் உள்ள மால்மேடி கிராமத்தில் உள்ள மக்கள் ராட்சத அளவில் ஆம்லெட் செய்து அதனை அனைவருக்கும் பகிர்ந்து வழங்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து 10-க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள் மற்றும் மக்களில் சிலர் இணைந்து அதற்கு உதவி புரிந்தனர். அவர்கள் மிகப்பெரிய பாத்திரத்தில் 10000 முட்டையை உடைத்து ஊற்றினர். அதில் வெங்காயம் மற்றும் இறைச்சியை கலந்து ஆம்லெட் செய்து, அந்த ராட்சத ஆம்லெட்டை விழாவில் பங்கு பெற்ற அனைத்து மக்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். ராட்சத ஆம்லெட்டை அனைவரும் சேர்ந்து செய்யும் வீடியோ இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 

Leave a Reply