சுவீடனின் வடக்குப் பகுதியில் உள்ள லபோனியா பகுதியில் கலைமான்கள் அதிகளவில் இருக்கின்றன. குளிர்காலங்களில் இவை உணவு தேடி ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு செல்லும்போது அங்கு செல்லும் ரெயில்களில் சிக்கி உயிர் இழப்பது வழக்கமாகும்.
கடந்த சனிக்கிழமை அன்று கைதூம் கிராமத்தின் அருகே 40 கலைமான்கள் பனி மூடிய தண்டவாளப் பகுதிகளில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்துகொண்டிருந்த ரெயிலின் ஓசை கேட்டதும் திடுக்கிட்ட அந்த மான்கள் தப்பிப்பதற்கு பதிலாக ரெயிலின் முன்னாலேயே பாயத் தொடங்கின. உடனடியாக ரெயிலை நிறுத்த முடியாததால் அவை அனைத்தும் ரெயிலில் சிக்கி உயிரை விட்டன.
இந்த சம்பவம் பார்க்கவே வருத்தத்தைத் தருவதாக இருந்ததாக மான்களை வளர்த்து வரும் இங்மார் பிளைன்ட் என்பவர் தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து ரெயில் பிராந்தியப் போக்குவரத்து பராமரிப்பு பொறுப்பு அதிகாரியான பிரடெரிக் ரோசண்டஹி கூறுகையில் பிரேக் பிடித்து நிறுத்துவதற்கு ஒரு கி.மீ தூரம் தேவைப்படும் ரெயிலில் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.