தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு: 7 நிமிடங்களில் முடிந்ததால் பயணிகள் அதிர்ச்சி

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு: 7 நிமிடங்களில் முடிந்ததால் பயணிகள் அதிர்ச்சி

தீபாவளி விடுமுறைக்கான சொந்த ஊர் செல்பவர்கள் முன்கூட்டியே ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வது வழக்கம். அப்போதுதான் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும். இந்த நிலையில் இன்று முதல் தீபாவளி விடுமுறைக்கான முன்பதிவு ஆரம்பம் என்ற அறிவிப்பு வெளிவந்தது. இதனையடுத்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் சென்னையில் பணிபுரிபவ்ர்கள் தங்களுடைய டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஆர்வமாக காத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு 8.07 மணிக்கே முடிந்துவிட்டது. தெற்கு ரயில்வே சார்பில் 250க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டிருந்தும் பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை

இந்த நிலையில் இன்று நவம்பர் 2ஆம் தேதிக்கான டிக்கெட்டுக்கள் முடிந்துவிட்டது. மறுநாளுக்கு அதாவது நவம்பர் 3ஆம் தேதிக்கான டிக்கெட்டாவது கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் உள்ளனர். நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி திருநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.