தீபா வீட்டின் முன் குவியும் கூட்டம். முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா?

தீபா வீட்டின் முன் குவியும் கூட்டம். முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா?

கடந்த இரண்டு நாட்களாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வர் பதவி ஏற்பது குறித்த பரபரப்பான செய்திகள் எந்த அளவுக்கு வெளிவந்து கொண்டிருக்கின்றதோ அதைவிட பலமடங்கு அதிகமாக தமிழக மக்களிடம் இருந்தும், எதிர்க்கட்சிகளிடம் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்நிலையில் அதிமுகவை சுயநலவாதிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டின் முன் அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.

தொண்டர்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு அதிவிரைவில் தீபா முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சசிகலா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை கண்டித்து கண்ணில் கருப்புத் துணி கட்டி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

Leave a Reply