டிசம்பர் 19-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்திற்கு அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை வகிப்பார் எனவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற தொண்டர்கள் உழைக்க வேண்டும் என ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply