எஞ்சினியரிங் மாணவியை கற்பழித்த கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை!

எஞ்சினியரிங் மாணவியை கற்பழித்த கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை!

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு கொளுத்தி கொலை செய்த குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடந்த 2016 ஆம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து கொண்டிருந்த மாணவி ஒருவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு கொளுத்திய குற்றவாளி கைது செய்யப்பட்டார்

அவர் மீது கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு பின் தற்போது ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இந்தத் தீர்ப்பில் குற்றவாளியின் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே குற்றவாளி சிறையில் இருந்தபோது இன்னொரு பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் அந்த வழக்கிலும் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.