shadow

தாசரி நாராயணராவ், பர்வதம்மாள் மரணம். சோகத்தில் தென்னிந்திய திரையுலகம்

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் தாசரி நாராயணராவ் அவர்கள் நேற்றிரவும், இன்று காலை பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் இன்று காலையும் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளதால் தென்னிந்திய திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இவர்கள் இருவரின் மரணம் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இன்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருவருமே கடந்த சில நாட்களாக உடல்நலம் இன்றி சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply