தர்பார் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு: கமல் கலந்து கொள்வாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 7ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் திரையுலக மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தர்பார் படத்த்ஹின் ஃபர்ஸ்ட் லுக்கை கமலஹாசன் வெளியிட்டதால் இந்த இசை வெளியீட்டு விழாவிலும் அவர் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை

ஏற்கனவே ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இணைந்து வரும் தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அதற்கு முன்னோட்டமாக இந்த இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு இருவரும் தாங்கள் ஒற்றுமையாக இருப்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

 

Leave a Reply