ரஜினியை துரத்தி கொண்டே செல்லும் சன் குழுமம்

ரஜினியை துரத்தி கொண்டே செல்லும் சன் குழுமம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ’தலைவர் 168’ என்ற திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கள்ளது என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகைக்கு இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை விற்பனையாகி உள்ளதாகவும், கடும் போட்டிக்கு இடையே சன் டிவி இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது

ஏற்கனவே ரஜினியின் முந்தைய படமான ’பேட்ட’ படத்தை தயாரித்த சன் குழுமம், தற்போது தர்பார் படத்தையும் சாட்டிலைட் உரிமையை பெற்றது மட்டுமின்றி அவரது அடுத்த படத்தையும் தயாரிக்க உள்ளது என்பதால் ரஜினியை இந்நிறுவனம் விடாது துரத்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply